செய்திகள்

நடிகை காஜல் அகர்வாலின் முடிவால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் | Vijay fans are happy with actress Kajal Aggarwal’s decision

தமிழில் இயக்குனர் பேரரசு இயக்கத்தில் வெளியான ‘பழனி’ படத்தின் மூலம் தமிழில் பிரபலமான நடிகை காஜல் அகர்வால், நடிகர்கள் அஜித்துடன் விவேகம், விஜய்யுடன் துப்பாக்கி, ஜில்லா, மெர்சல். சூர்யாவுடன் மாற்றான், கார்த்தியுடன் நான் மகான் அல்ல, ஆல் இன் ஆல் அழகுராஜா. தனுஷ் உடன் மாரி, ஜெயம் ரவி உடன் கோமாளி உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

Vijay fans are happy with actress Kajal Aggarwal’s decision

கடைசியாக காஜல் அகர்வால் நடிப்பில் தமிழில் ‘ஹே சினாமிகா’ படம் வெளியானது. தற்போது கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன்-2 படத்தில் நடித்து வருகிறார். காஜல் அகர்வால் நடித்துள்ள கோஸ்டி எனும் படமும் படப்பிடிப்பு முடிந்து மார்ச் மாதம் 17 ஆம் தேதி ரிலீஸ்க்கு தயாராகி வருகிறது.

Vijay fans are happy with actress Kajal Aggarwal’s decision

சென்ற 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் காஜல் அகர்வால், தொழிலதிபர் கௌதம் கிட்ச்லு என்பவரை திருமணம் செய்து கொண்டார். மும்பையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இருவீட்டார் பங்கு பெற்ற திருமணம் நடைபெற்றது.

Vijay fans are happy with actress Kajal Aggarwal’s decision

காஜல் அகர்வால் – கௌதம் கிட்ச்லு தம்பதியருக்கு கடந்த மாதம் (19.04.2022) அழகான ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு ‘நெய்ல்’ என பெயரிட்டுள்ளனர். குடும்ப பெயரான கிட்ச்லு உடன் இணைத்து நெய்ல் கிட்ச்லு என இக்குழந்தை அழைக்கப்படுகிறது.

குழந்தை பிறந்து 10 மாதம் கடந்த நிலையில் காஜல் அகர்வால் திருமணத்திற்கு பிறகு முதல் பேட்டியை பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு அளித்துள்ளார். அதில், “நீங்கள் நடித்த படங்களில் உங்களுக்கு பிடித்த ஒரு காட்சியையோ அல்லது பாடலையோ உங்கள் மகனுக்கு காட்ட வேண்டும் என்று நினைத்தால் எந்த படத்தின் காட்சிகளை காட்டுவீர்கள்?” என்ற கேள்விக்கு “இது குறித்து நான் யோசிக்கவே இல்லை. முதல் 8 வயது வரை எதுவும் பார்க்க விட மாட்டேன். 8 வயது ஆன பிறகு துப்பாக்கி படத்தினை பார்க்க வைப்பேன்” என பதில் அளித்தார்.

இந்த பதிலை கேட்ட விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar Posts