செய்திகள் | சின்னத்திரை

மறைந்த சீரியல் இயக்குனர் தாய் செல்வமுக்கு விருதுகொடுத்து கௌரவித்த விஜய் டிவி | Vijay TV honored late serial director Thai Selvam with an award.

சின்னத்திரையில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் தாய் செல்வம். இவர் இயக்கத்தில் நாம் இருவர் நமக்கு இருவர், பாவம் கணேசன், கல்யாணம் முதல் காதல் வரை, மௌன ராகம் 1 உள்ளிட்ட சீரியல்களை தாய் செல்வம் இயக்கியுள்ளார்.

Vijay TV honored late serial director Thai Selvam with an award.

சின்னத்திரை மட்டுமின்றி வெள்ளித்திரையில் இவர் பணியாற்றியுள்ளார். ஆம், எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் வெளிவந்த ‘நியூட்டானின் மூன்றாம் விதி’ படத்தை இயக்கியுள்ளார். தாய் செல்வம் இயக்கிய கடைசி சீரியல் ஈரமான ரோஜாவே. இந்த சீரியலில் பணிபுரிந்து கொண்டிருந்த நேரத்தில் தான் தாய் செல்வம் காலமானார்.

இந்நிலையில், மறைந்த இயக்குனர் தாய் செல்வம் அவர்களை கௌரவிக்கும் விதமாக சிறந்த இயக்குனருக்கான விருதை கொடுத்துள்ளனர். இந்த விருதை அவருடைய மனைவி வாங்கியுள்ளார்.

Similar Posts