வெப் சீரிஸில் களமிறங்குகிறார் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன்..!(Vijayakanth’s son Shanmuga Pandian is debuting in a web series)
விஜயகாந்த் என்றும் மக்கள் மத்தியில் நிலைத்து நிற்பவர். அவரது மகன் சண்முக பாண்டியன் தனது தந்தையை போலவே சினிமாவில் ஹீரோவாக களமிறங்கினார். இவர் நடித்த படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு மக்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை.
இதன்பின் படங்களில் நடிக்காமல் இருந்த சண்முக பாண்டியன், தற்போது மீண்டும் வெப் சீரிஸ் மூலம் நடிக்க வந்துள்ளார்.
வேல ராமமூர்த்தி எழுதிய குற்றப் பரம்பரை நாவல் தற்போது வெப் சீரிஸாக உருவாகிறது. நடிகரும், இயக்குனருமான சசி குமார் இந்த வெப் சீரிஸை இயக்குகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
