விக்ரமின் செல்ல வதைகள் எங்களுக்கு, மிருணாள் மற்றும் மீனாட்சி..!
கோப்ரா ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட மிருணாளினி ரவியும், மீனாட்சி கோவிந்தராஜனும் விக்ரம் பற்றி கூறியதாவது,
இரவு நேரத்தில் படப்பிடிப்பு நடந்தபோது நாங்கள் டயர்டாகி சேரில் உட்கார்ந்தபடியே தூங்கியிருக்கிறோம். அப்படி தூங்கியபோது விக்ரம் சார் எங்கள் முகத்தில் தண்ணீர் தெளித்துவிடுவார்.
விக்ரம் சார் நாங்கள் தூங்குவதை வீடியோ எடுத்து கிண்டல் செய்தார். திடீரென்று சாப்பாட்டுத் தட்டில் வந்து சாப்பிடச் சொன்னார். ஷூட்டிங் நடந்தபோது , எங்களை செல்லமாக வதைத்து கொடுமைப்படுத்தினார்கள் என்றார்கள்.
