வைரலாகும் பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலனாக மாறிய விக்ரம் | Vikram turned Adithya Karikalan in Ponniyin Selvan which went viral
பொன்னியின் செல்வன் இரண்டாவது பாகம் அடுத்த மாதம் 28ம் தேதி ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் பாகத்தில் அதிகமான காட்சிகள் இல்லாதவர்களுக்குக் கூட இந்த பாகத்தில் அழுத்தமான காட்சிகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் படம் ரிலீசாக இன்னும் ஏறக்குறைய ஒரு மாதம் உள்ள நிலையில் படத்தின் ப்ரமோஷனை தற்போது படக்குழுவினர் துவக்கியுள்ளனர்.

இந்தப் படத்தில் ஆதித்த கரிகாலனாக நடித்துள்ளார் நடிகர் விக்ரம். கடந்த பாகத்தில் இவருக்கு தனியாக பாடல் வைக்கப்பட்டிருந்தது. ஒரு அரசனுக்குரிய கெட்டப்பில் இவர் சிறப்பாக காணப்பட்டார். இந்நிலையில் இரண்டாவது பாகத்தில் இவருக்கான போர்ஷன்கள் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் நடிகர் விக்ரம் ஆதித்த கரிகாலனாக மாறிய தருணத்தின் சிறப்பை படக்குழுவினர் வீடியோவாக வெளியிட்டுள்ளனர்.