செய்திகள்

வில்லன் நடிகர் 20 முறை தற்கொலை முயற்சி..!

தமிழ் திரையுலகில் வில்லனாக வலம் வந்தவர் பொன்னம்பலம். அதன் பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற அவர், கடந்த ஐந்து ஆண்டுகளாக சிறுநீரக பாதிப்பால் அவதிப்பட்டு வருகிறார்.

இதற்காக அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தனது சிகிச்சைக்கு உதவுமாறு முன்னணி நடிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்த நிலையில் பொன்னம்பலம் அளித்த பேட்டி ஒன்றில், ‘எனக்கு உடல்நிலையும் சரியில்லை, மருத்துவத்திற்கும் பணம் இல்லை. சம்பாதித்த பணத்தை சேர்த்து வைக்காமல் சொத்தும் வாங்கி போடவில்லை.

இதனால் மன விரக்தி அடைந்து 20 முறை தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற எண்ணம் வந்தது. இதனையடுத்து முன்னணி நடிகர்களிடம் உதவி கேட்டேன். விஜயகாந்த் எனக்கு மிகவும் பிடித்தவர். அவரை மட்டும் நான் நேரில் பார்த்தால், அப்போதே என் உடல்நிலை மேலும் பாதித்து இறந்துவிடுவேன்’ என தெரிவித்துள்ளார்.    

Similar Posts