இயக்குனர் ஹரியுடன் விஷால் 3வது முறையாக இணையவுள்ளார். | Vishal will team up with Director Hari for the 3rd time.
நடிகர் விஷால் மற்றும் இயக்குநர் ஹரி வெற்றிக் கூட்டணி, முன்னதாக தாமிரபரணி, பூஜை போன்ற படங்களில் இணைந்து ரசிகர்களுக்கு சிறப்பான பிளாக் பஸ்டர் கொடுத்தது.

இந்நிலையில் யாரும் எதிர்பாராத வகையில், இந்தக் கூட்டணி தற்போது மூன்றாவது முறையாக இணைந்துள்ளது. விஷால் 34 படத்திற்காகத்தான் இந்தக் கூட்டணி தற்போது இணைந்துள்ளது.

இந்தப் படத்தை கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனமும் ஜீ ஸ்டூடியோ நிறுவனமும் இணைந்து தயாரிக்கவுள்ள நிலையில், நேற்றைய தினம் படத்திற்கான பூஜை எளிமையாக போடப்பட்டு, படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகியுள்ளது.

ஸ்டெதஸ்கோப்பை சுற்றி, அரிவாள், கத்தி, கைவிலங்கு, துப்பாக்கிகள் காணப்படுவதாக அந்த போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.