வாடகைத்தாய் குழந்தை பற்றி நான் தான் தீர்மானிப்பேன்- விஜே ரம்யா..!(VJ Ramya- Iwill decide about surrogacy baby)
விஜே ரம்யா நிகழ்ச்சிகள் தவிர சங்கத்தமிழன், கேம் ஓவர், ஆடை என அடுத்தடுத்தப் படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து கடந்த 2014ம் ஆண்டில் திருமணம் செய்துக் கொண்டார்.ஆனால் ஏனோ கணவரை விவாகரத்து செய்தார்.
இந்நிலையில், ரம்யா அளித்துள்ள பேட்டி ஒன்றில், திருமணம் என்பது முக்கியமானது. ஆனால் அதுவே துவக்கமோ முடிவோ இல்லை. திருமணம் மற்றும் குழந்தை மற்றவர் விருப்பத்திற்காக இருக்க கூடாது.
நம்முடைய விருப்பப்படிதான் அமைய வேண்டும். குழந்தை பெற்றுக் கொள்ளலாமா அல்லது வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற்றுக் கொள்ளலாமா என்பதையும் நாம்தான் தீர்மானம் செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
