அருண்ராஜா காமராஜ் – ஜெய் கூட்டணியில் உருவான வெப் சீரிஸ்| Web series created by Arunraja Kamaraj – Jai alliance
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த கனா படத்தின் இயக்குநராக அறிமுகமானவர் தான் அருண்ராஜா காமராஜ். அதனைத் தொடர்ந்து உதயநிதி நடித்த நெஞ்சுக்கு நீதி படத்தையும் இயக்கியிருந்தார்.

இயக்குநர், பாடலாசிரியர், நடிகர் என வெரைட்டியாக வலம் வரும் அருண்ராஜா காமராஜ் தற்போது வெப் சீரிஸ் பக்கம் சென்றுள்ளார். அவர் இயக்கியுள்ள முதல் வெப் சீரிஸ் குறித்து பிரபல ஓடிடி தளம் அஃபிஸியல் அப்டேட் வெளியிட்டுள்ளது.

அதன்படி, டிஸ்னி ப்ளஸ் ஓடிடி தளத்துக்காக முதல் வெப் சீரிஸ்ஸை இயக்கியுள்ளார் அருண்ராஜா காமராஜ். லேபிள் என்ற டைட்டிலில் உருவாகியுள்ள இந்த வெப் சீரிஸில் ஜெய் ஹீரோவாக நடித்துள்ளார். அவருடன் தன்யா ஹோப், மகேந்திரன், ஸ்ரீமன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர், சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். இந்த வெப் சீரிஸ் விரைவில் வெளியாக உள்ளதாக டிஸ்னி ப்ளஸ் தனது சமூக வலைத்தள பக்கங்களில் அறிவித்துள்ளது.