நடிகர் விஜய்யை நேரில் சந்தித்த நடிகர் விஷால் காரணம் என்னவாக இருக்கும்? | What could be the reason why actor Vishal met actor Vijay in person?
த்ரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அடங்காதவன் அசராதவன், பஹீரா உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அடுத்து உருவாகி வரும் மார்க் ஆண்டனி படத்தில் விஷால் ஹீரோவாக நடித்து வருகிறார். எஸ்.ஜே. சூர்யா, செல்வராகவன் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்தின் டீசர் இன்று வெளியாக உள்ள நிலையில், அந்த டீசரை ஆஃப் லைனில் நடிகர் விஜய்யை வைத்தே ரிலீஸ் செய்துள்ளார் விஷால்.

நடிகர் விஜய்க்கும் சினிமாவில் ஏகப்பட்ட நடிகர்களே தீவிர ரசிகர்களாக உள்ளனர். அதில் ஒருவர் தான் விஷால். இந்நிலையில், தனது மார்க் ஆண்டனி படத்தின் டீசரை நடிகர் விஜய்யை வைத்து வெளியிட முடிவு செய்த அவர் அவரை சந்திக்க அனுமதி கேட்டதும், அதுக்கென்னப்பா பண்ணிட்டா போச்சு என உடனடியாக ஓகே சொன்ன நிலையில், விஜய் – விஷால் சந்திப்பு இன்று அமோகமாக நடந்துள்ளது.

அந்த டீசரை முதன் முறையாக விஜய்க்கு போட்டுக் காட்டி சந்தோஷப்பட்ட தருணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை நடிகர் விஷால் தற்போது தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளார்.