செய்திகள்

சசிகுமார் நடித்த அயோத்தி படம் பற்றி சீமான் கூறியது என்ன? | What did Seeman say about Sasikumar starrer Ayothi?

சுப்ரமணியபுரம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகம் ஆனவர் சசிகுமார். இந்த திரைப்படத்தில் அவர் நடிக்கவும் செய்திருந்த சூழலில், தமிழ் சினிமாவின் மிக முக்கியமான படைப்பாகவும் சுப்ரமணியபுரம் மாறி இருந்தது. கடந்த ஆண்டு சசிகுமார் நடிப்பில், கொம்புவெச்ச சிங்கம்டா, நான் மிருகமாய் மாற, காரி உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகி இருந்தது.

இதனைத் தொடர்ந்து, சசிகுமார் நடித்திருந்த அயோத்தி திரைப்படம், கடந்த மார்ச் 03 ஆம் தேதி திரை அரங்குகளில் வெளியாகி இருந்தது. மந்திர மூர்த்தி இயக்கத்தில் உருவான அயோத்தி திரைப்படம், சிறந்த வரவேற்பை மக்கள் மத்தியில் பெற்று வருகிறது.

What did Seeman say about Sasikumar starrer Ayothi?

இந்நிலையில் அயோத்தி திரைப்படம் குறித்து பேசிய சீமான், “அயோத்தி தமிழ் திரையுலகின் மிக முக்கியமான ஒரு படம். தம்பி சசி வழக்கமா இயல்பான நடிப்பில் அந்த கதாபாத்திரத்தை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டவர். என் தம்பி சசிக்கு இது இன்னொரு படிநிலைப் பாய்ச்சல்ன்னு தான் சொல்லனும். வேறொரு நிலைக்கு அவரோட திரையுலக பயணத்தை தள்ளிட்டு போகும்ன்னு தான் நான் நினைக்கிறேன். அவ்வளவு சிறந்த படைப்பு.

What did Seeman say about Sasikumar starrer Ayothi?

நீங்க படம் பாருங்க, ரொம்ப ஒரு அருமையான உணர்வை உங்களுக்குள்ள கடத்திச் செல்லும். மனம் அன்பில் பூக்கும் போது மதமும், தெய்வங்களும் எதுக்குன்னு கேக்குறாரு, அதுதான் இந்த கதை சொல்லுது. அது என்னன்னா மதம், வேதம், தர்மம் இது எல்லாம் தாண்டி புனிதமானது மனிதம் அப்படின்றது தான் இந்த படம் சொல்லுது. இந்த மாதிரி படத்தை எல்லாரும் பார்த்து கொண்டாடவில்லை என்றால் இன்னொரு அரிய படைப்பு அரிதிலும் அரிதாக போய் விடும்” என தெரிவித்துள்ளார்.

Similar Posts