நடிகை ஷாம்லிக்கு இப்படி ஒரு திறமை இருப்பது யாருக்கு தெரியும்? | Who knew actress Shamlee had such talent?
குழந்தை நட்சத்திரமாக ஜொலித்த ஷாம்லி.. சினிமா துறையில் மட்டுமின்றி, ஓவியம், நடனம் போன்ற கலை வடிவங்களிலும் தனது கவனத்தை செலுத்தி, இன்று சர்வதேச ஓவியக் கலைஞராக தனி அடையாளத்தை பெற்றுள்ளார்.

ஓவிய துறையில் மேதையான ஏ. வி. இளங்கோவின் வழிகாட்டுதலில் ஓவியம் வரைவதில் கவனம் செலுத்தினார். இந்தத் துறையில் இடைவிடாத பயிற்சி, விடாமுயற்சி, அர்ப்பணிப்புள்ள கடின உழைப்பால்.. அதிக எண்ணிக்கையிலான ஓவியங்களைத் தயாரிக்கத் தொடங்கினார்.

அவர் வரைந்த ஓவிய படைப்புகளை தற்போதைய காலகட்டத்திற்கு ஏற்ற வண்ணமயமான பிரேம்களில் தனது ஓவியங்களை காட்சிப்படுத்தியுள்ளார். அவரது படைப்புகளில் இடம்பெறும் பெண்கள் தங்கள் சுதந்திர ஆன்மாவை வெளிப்படுத்துகிறார்கள். சில படைப்புகளில், பெண்கள் தங்கள் சமூகக் கட்டுகளிலிருந்து விடுபட்டு இலட்சியத்தை நோக்கிச் செல்வதாக அமைந்திருக்கிறது. . ஓவியக் கலைஞர் ஷாம்லி தனது படைப்புகளில் பிரதிபலிக்கும் பெண்கள் சிந்தனையைத் தூண்டும் மற்றும் சமுதாயத்தில் எப்படி முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்பதைப் பிரதிபலிக்கிறார்கள்.

மேலும் இவர் பயன்படுத்தும் கோடுகள், வளைவுகள், வண்ணங்கள், கோடுகள்… அனைத்தும் அவளது தனித்துவத்தை வெளிப்படுத்தி, பெண்மையின் வலிமையையும், அவற்றில் ஒளிந்திருக்கும் புதிய ஆற்றலையும் வலியுறுத்துவது போல் உருவாக்கி இருக்கிறார்.

ஷாம்லி தனது படைப்புகளை துபாயில் உள்ள சர்வதேச கலைக்கூடமான வேர்ல்ட் ஆர்ட் துபாயில் காட்சிப்படுத்தியுள்ளார்.

இந்த கலைக்கூடத்தில் உலகெங்கிலும் உள்ள அறுபது நாடுகளில் இருந்து 300 க்கும் மேற்பட்ட கலைஞர்கள் இந்த கலைக்கூடத்தில் தங்கள் படைப்புகளை காட்சிப்படுத்தினர். சர்வதேச பார்வையாளர்களை கவரும் துபாய் உலக வர்த்தக மையத்தில் கடந்த 9ம் தேதி முதல் 12ம் தேதி வரை நான்கு நாட்கள் நடந்த ஓவிய கண்காட்சியில் இவரது படைப்புகளை பார்த்த பார்வையாளர்கள் இவரின் திறமையை கண்டு வியந்து அங்குள்ள பதிவேட்டில் தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர்.

சர்வதேச ஓவியக் கலைஞராக தனித்துவம் மிக்கவராகத் திகழ்ந்த ஷாம்லியை இன்று தமிழ்த் திரையுலகின் பெருமையாக திரையுலகினர் கொண்டாடி வருகின்றனர்.