செய்திகள்

துரதிஷ்டவசமாக நடந்திடுச்சு..இதனால் தமிழில் நடிக்கல..!

எங்கேயும் எப்போதும் படம் மூலம் நம்மை திரும்பி பார்க்க வைத்த நடிகர் தெலுங்கு முன்னணி நடிகரான சர்வானந்த். தற்போது 10 வருடங்களுக்கு பிறகு கணம் படத்தின் மூலம் தமிழுக்கு மீண்டும் வருகிறார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: நிறைய ஆசைகளோடுதான் தமிழ் சினிமாவுக்கு வந்தேன்.கடைசியாக நடித்த ஜேகே துரதிர்ஷ்டவசமாக அந்த படம் தியேட்டரில் வெளியாகவில்லை.நானும் தெலுங்கில் பிசியாகி விட்டேன்.

என்றாலும் தமிழ் படங்களை தொடர்ந்து பார்த்து வந்தேன். தமிழில் நல்ல கதை அமைந்ததால் நடிக்க சம்மதித்தேன். தெலுங்கில் அம்மா சென்டிமென்டை மையமாக படத்தில் நடிக்கிறேன்.

இந்த படம் தமிழ் மக்களுக்கு பிடிக்கும், தொடர்ந்து தமிழில் நடிப்பேன் என்று நம்புகிறேன். என்றார் சர்வானந்த்.

Similar Posts