செய்திகள்

விடுதலை படத்திற்கு பிறகு நகைச்சுவை வேடத்தில் நடிப்பீர்களா? சூரியின் பதில் | Will you be playing a character as a comedian after Viduthalai? Soori’s reply

வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரி நடிக்கும் ‘விடுதலை’ திரைப்படம் இரண்டு வெவ்வேறு பாகங்களாக உருவாகி வருகிறது. இரண்டு பாகங்களாக வெளியாக உள்ள இந்த படத்தில் சூரி கதாநாயகனாக நடித்துள்ளார். இதுவரை நகைச்சுவை நடிகராக இருந்த சூரி இந்த படத்தின் மூலம் ஹீரோ அவதாரம் எடுத்துள்ளார்.

Will you be playing a character as a comedian after Viduthalai?

இந்நிலையில் நடிகர் சூரி விடுதலை திரைப்படம் வெளியீடு குறித்து பிரத்யேக சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் பேசிய நடிகர் சூரி, “நிச்சயமாக நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன்.

Will you be playing a character as a comedian after Viduthalai?

இந்த வாழ்வும் சரி இந்த தளமும் சரி நான் சற்றும் எதிர் பார்க்காதது. இது தற்போது நல்லபடியாக அமைந்திருக்கிறது என்று நம்புகிறேன். எங்கேயோ இருந்து, எப்படியோ வந்தேன். சினிமாவில் தலைகாட்டவிட மாட்டோமா என்று நினைத்துக் கொண்டிருந்த காலம் தாண்டி அதற்கு பல காலகட்டங்கள், எடுத்தது.

அதன் பிறகு சினிமாவில் அங்குமிங்கமாக தலைகாட்டி, அதன் பிறகும் ஒரு காட்சியில் நடிக்க மாட்டோமா என்று இருந்து, பிறகு ஒரு நகைச்சுவை நடிகராக திரையில் தோன்றி, அதன் பிறகும் நகைச்சுவை நடிகராக இன்னும் நமக்கு நிறைய மைலேஜ் வேண்டும் என்று அதற்குண்டான மெனக்கெடலை செய்திருக்கிறேன்.

எனவே அதற்காக நிறைய உழைத்திருக்கிறேன், இப்போது வரை அதைச் செய்கிறேன், எப்போதுமே அதற்கான வேலையை செய்து கொண்டேதான் இருப்பேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Similar Posts