யாத்திசை திரைப்படத்தின் திரைவிமர்சனம் | Yaathisai Movie Review

தரணி ராஜேந்திரன் இயக்கத்தில், சக்தி மித்ரன், சேயோன், ராஜலட்சுமி, குரு சோமசுந்தரம், சமர், ஜமீல், சுபத்ரா, வைதேகி உள்ளிட்டோர் நடிப்பில் உருவான ‘யாத்திசை’ திரைப்படம் எப்படி இருக்கு வாங்க பார்க்கலாம்.
படக்குழு
இயக்கம்:
தரணி ராசேந்திரன்
தயாரிப்பு:
கே.ஜே. கணேஷ்
வெளியீடு:
வீனஸ் இன்ஃபோடெயின்மென்ட்
சிக்ஸ் ஸ்டார் என்டர்டெயின்மென்ட்
முக்கிய கதாபாத்திரங்கள்:
சக்தி மித்ரன்
சேயோன்
ராஜலட்சுமி
குரு சோமசுந்தரம்
இசை:
சக்ரவர்த்தி
படத்தின் கதை
பாண்டிய மன்னனான ரணதீரனுக்கும், எயினர்களுக்கும் இடையேயான போரை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள படம் தான் யாத்திசை.

ஏழாம் நூற்றாண்டில், பாண்டிய பேரரசை வெல்ல சேரன் தலைமையில் சோழப் பேரரசும் போர் புரிகிறார்கள். அவர்களுக்கு துணையாக வேளிர், எயினர் போன்ற பழங்குடி கூட்டங்களும் துணை நிற்கிறது.

போரின் இறுதியில், ரணதீரன் பாண்டியன் தலைமையிலான பாண்டிய பேரரசு, சோழ கோட்டையோடு சேர்த்து, மொத்த தென்திசையையும் கைப்பற்றுகிறது. இதிலிருந்து தப்பிய சில சோழர்கள் காட்டில் மறைந்து வாழ்கிறார்கள்.

அவர்களில் எயினர் கூட்டமும் ஒன்று. ரணதீரன் பாண்டியனை வென்று, மீண்டும் சோழ மண்ணின் அதிகாரத்தை கையில் எடுப்பேன் என சபதம் எடுக்கிறார் எயினர் குடியின் கொதி. பாண்டியனை வீழ்த்த சோழர்களின் துணையையும் நாடுகிறார்.

சொன்னபடியே ரணதீரனை வீழ்த்தி சோழ அதிகாரத்தை கையில் எடுத்தாரா கொதி? இல்லை பாண்டிய மன்னன் தன்னை நோக்கி வரும் எதிரிகளை வென்றாரா? என்பதே படத்தின் மீதி கதை.
படத்தின் சிறப்பு
ஆக்ஷன் மற்றும் போர் காட்சிகள் ஆகியவை படத்திற்கு பெரிய பிளஸ்.
7ஆம் நூற்றாண்டின் நம்பக தன்மையுடன் கண்முன் நிறுத்துகிறது.
இயக்குனரின் கதை தேர்வு, திரைக்கதையை அமைத்த விதம்
படத்தின் சொதப்பல்கள்
சில இடங்களில் ஏற்படும் தொய்வு
VFX காட்சிகளில் குறை
மதிப்பீடு: 3/5
புதிய நடிகர் பட்டாளத்தை வைத்து இப்படி ஒரு படத்தைத் தயாரித்த குழுவினருக்கு பாராட்டுகள். 8 கோடி பட்ஜெட்டில் இந்த அளவிற்கு மேக்கிங் செய்ய முடியும் என இயக்குனர் தரணி ராசேந்திரன் நிரூபித்து காட்டியுள்ளார்.
ஒவ்வொரு ரசிகனுக்கும் வேறு விதமான ரசனை இருக்கும். திரை விமர்சனத்தால் ஒரு படத்தை அளவிட முடியாது. எனவே நீங்களும் ஒருதடவை படத்தைப்பார்த்து உங்கள் விமர்சனத்தை பின்னூட்டத்தின் ஊடாக எமக்கு அனுப்புங்கள்.