சின்னத்திரை

நீங்களே குந்தவையாக நடிக்கலாமே.. திரிஷா எதற்கு..?

பொன்னியின் செல்வன் படத்தில் தற்போது முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பவர் தான் த்ரிஷா. இவர் முண்ணனி நடிகைகளில் ஒருவர். 20 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் இருக்கிறார்.

மணி ரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

சமீபத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் டீசர் மூலம் ரசிகர்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்துள்ளார் திரிஷா.

இந்நிலையில் குந்தவை திரிஷாவை போவே அச்சு அசல் அப்படியே மாறியுள்ளார் பிக் பாஸ் பிரபலம் சுருதி.

குந்தவை போல தன்னை அலங்கரித்துக்கொண்டு போட்டோஷூட் நடத்தி, அந்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டகிராமில் பதிவு செய்துள்ளார் சுருதி.

சுருதி நடந்து முடிந்த பிக் பாஸ் சீசன் 5வில் போட்டியாளராக கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar Posts