குழப்பங்கள் நிறைந்த யூகி திரைவிமர்சனம்..!(Yuki movie review)

அடுத்த அடுத்த சம்பவங்களை முடிந்தால் யூகிச்சு பாருங்கள். இல்லை என்றால் நாங்க சொல்கிறோம் என்று இயக்குனர் ஹாரிஸ் இயக்கியுள்ள படம் யூகி. நாங்களும் கதைய கொஞ்சம் யூகிச்சுக்கலாமா..? வாங்க ஆரம்பிப்போம்.
படக்குழு

இயக்கம்:
ஜாக் ஹாரிஸ்
தயாரிப்பு:
ராஜதாஸ் குரியாஸ்
வெளியீடு:
11: 11 புரடக்ஷன்
முக்கிய கதாபாத்திரங்கள்:
கதிர், நடராஜன் சுப்ரமணியம், நரேன், பவித்ரா லட்சுமி, கயல் ஆனந்தி மற்றும் ஆத்மியா ராஜன்,ஜான் விஜய் , வினோதினி
இசை:
ரஞ்சின் ராஜ்
படத்தின் கதை
படத்தின் ஆரம்பத்தில் ஒரு பிரபலமான நடிகர் மர்மமான முறையில் சுட்டுக்கொல்லப்படுகிறார். அதேபோல் இன்னும் சிலரும் தொடர்ந்து கொலை செய்யப்படுகின்றனர். இந்த கொலைகளுக்கு காரணம் யார் என்பதை கண்டு பிடிக்க மந்திரி ஒருவர் ரவுடி ஒருவரை நியமிக்கிறார். அவர்தான் நட்டி.
மறுபுறம் ஒரு பெண் காணாமல் போகிறார். அதேசமயத்தில் சிலை கடத்தலும் இடம்பெறுகிறது. இந்நிலையில் ஓய்வுற்ற பொலிஸ் அதிகாரி பிரதாப் போத்தன் (புருசோத்தமன்)துப்பறிவு நிறுவனம் வைத்துள்ள நரேன்க்கு(நந்தா) அந்த பெண்ணை கண்டுபிடிக்க கட்டளையிடுகிறார். அந்த விஷயம் ரகசியம் என்றும் அதை கண்டுபிடிக்க உதவிகள் செய்வதாகவும் கூறுகிறார்.

அவர் தன்னுடைய சகாக்களுடம் வேலையை தொடங்குகிறார். அந்த பெண்னை பற்றிய தகவல் கிடைத்த சஸ்பெண்ஸில் உள்ள கதிரும் இணைகிறார்.ஆனால் அந்த பெண் யார்? எங்கே இருக்கிறார் என்பதை கண்டுபிடிக்க முடியாமல் தடுமாறி நிற்கின்றனர்.
பெண்ணை கண்டு பிடிக்கிறாரா? சிலை கடத்தலை பிடிக்கிறாரா? தெரியவில்லை. இந்நிலையில் அந்த ரவுடிக்கும் அந்த பெண் காணாமல் போனதற்கும் ஒரு தொடர்பு உள்ளது. இரு குழுக்களும் கடைசியில் அந்த பெண்ணை கண்டு பிடித்தார்களா..? முதலில் யார் கண்டுபிடிக்கிறார்கள்..?மற்றும் நட்டிக்கும் அந்த பெண்ணுக்கும் என்ன தொடர்பு என்பதே கதையாகும்.
இதற்கிடையில் பவித்ரா கதிருக்கு இடையில் காதலும் ஒரு வாழ்க்கையும் சென்றுகொண்டிருக்கிறது.
திறமையின் தேடல்
நடிகர் கதிர் தனக்கு கொடுத்த பாத்திரத்தை எந்த குறையுமில்லாமல் செய்துள்ளார். நடிகை ஆனந்தி எமோஷ்னல் காட்சிகளில் தனது உணர்வை வெளிப்படுத்தி நடித்துள்ளார். நடிகை பவித்ராவும் சிறப்பாக நடித்துள்ளார்.
கதையின் சுவாரஷ்யம் குறையாமல் கொண்டு செல்வது நடிகர் நரேன் மற்றும் நட்டி தான். நரேனின் நடிப்பு ஒரு பொலிஸ் அதிகாரியாக எப்பொழுதும் ஒரு சந்தேக கண்ணோட்டத்துடன் நகர்கிறது. அதுவே நம்மையும் ஈர்க்கிறது. மற்றும் நட்டி ஒரு மாஸ் கதாபாத்திரத்தில் செம்மையா பண்ணியுள்ளார். சிறப்பாக இருந்தது எனலாம்.

மற்றும் நடிகை வினோதினியை முதல் தடவை ஒரு நெகட்டிவ் பாத்திரத்தில் பார்த்ததைப்போன்று நன்றாக நடித்திருப்பார்.ஜான் விஜய் மேனரிஸமா பண்ணியுள்ளார். பிண்ணனி இசை ஓகே. எடிட்டிங் நன்றாகவும் ஒளிப்பதிவு கலர்புல்லாகவும் உள்ளது.
தனக்கும் தனது மனைவிக்கும் அநியாயமாக நடந்த கொடூரத்திற்கு பழிவாங்க எப்படி ரிவெஞ் எடுக்கிறார் அந்த கணவன் என்பதே கதையின் முக்கிய கூறு. அதை வித்தியாசமான முறையில் தந்து இருக்கிறார்.கடினமான கதையை சிறப்பான முறையில் தந்துள்ளனர் இயக்குனர் மற்றும் எழுத்தாளர் அவர்களுக்கு பாராட்டுக்கள்.
படத்தின் சிறப்பு
எழுத்தாளர் கதைகளம்,
சிறப்பு நடிப்புகளில் நடிகர்கள்,
பிண்ணனி இசை,
புதிய திருப்பங்கள்
படத்தின் சொதப்பல்கள்
பாடல்கள் தேவையில்லாதவை,
தொழில்நுட்ப ரீதியாகவும் பலவீனமான படம்.
சீரற்ற காட்சி ஆர்டர்கள், தேவையற்ற காட்சிகள்,
மாறுதல் தாவல்கள் மற்றும் ஷாட் செருகல்கள்

மதிப்பீடு: 2/5
குழப்பங்கள் பல நிறைந்த த்ரில்லர் கதையாகும். நீங்களே படம் பார்த்து யூகிச்சு கொல்லுங்கள்.
ஒவ்வொரு ரசிகனுக்கும் வேறு விதமான ரசனை இருக்கும். திரை விமர்சனத்தால் ஒரு படத்தை அளவிட முடியாது. எனவே நீங்களும் ஒருதடவை படத்தைப்பார்த்து உங்கள் விமர்சனத்தை பின்னூட்டத்தின் ஊடாக எமக்கு அனுப்புங்கள்.