டாக்டர் பட்டம் பெற்ற யுவன்,குவியும் வாழ்த்துக்கள்..!
அரவிந்தன் படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் யுவன் சங்கர் ராஜா.
16 வயதிலேயே படங்களுக்கு இசையமைக்க தொடங்கிய யுவன், இதுவரை 150க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து, தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார்.
இந்நிலையில், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுக்கு சென்னை சத்யபாமா பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. தமிழ் சினிமாவில் அவரது கலைச் சேவையை பாரட்டி இந்த டாக்டர் பட்டத்தை யுவனுக்கு வழங்கி உள்ளனர்.
கவுரவ டாக்டர் பட்டம் பெற்ற யுவன் சங்கர் ராஜாவுக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. அவர் டாக்டர் பட்டம் பெற்றபோது எடுத்த புகைப்படங்களும் வெளியாகி வைரலாகி வருகின்றன


