செய்திகள்

நடிகர் பிரேம்ஜிக்கு ஐபோன் வழங்கிய யுவன் சங்கர் ராஜா..!(Yuvan Shankar Raja gave iPhone to Actor Premji)

சென்னை28 திரைப்படம் மூலம் பிரபலமானவர் தான் நடிகர் பிரேம்ஜி. நடிப்பதில் மட்டுமல்லாமல் இசையிலும் பல திரைப்படங்களுக்கு பிரேம்ஜி இசையும் அமைத்துள்ளார்,

இதனிடையே நடிகர் பிரேம்ஜியின் இசையை பாரட்டி , யுவன் சங்கர் ராஜா அவருக்கு ஒரு ஐபோனை பரிசளித்துள்ளார். இதுகுறித்த புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அதில் யுவன் சங்கர் ராஜா, பிரேம்ஜி மற்றும் வெங்கட் பிரபு இருக்கின்றனர். மேலும் அப்புகைப்படத்தில் யுவன் பிரேம்ஜிக்கு ஐபோனை பரிசளிக்கும் பொழுது வெங்கட் பிரபு வருத்தமடையச்செய்வது போல தன்னுடைய முகத்தை வைத்திருக்கிறார்.

இப்புகைப்படத்தை பார்த்த பலரும் பிரேம்ஜிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தும் , இயக்குனர் வெங்கட் பிரபுவின் மைண்டு வாய்ஸ் குறித்தும் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

Actor Premji

Similar Posts